×
 

தமிழக சட்டப்பேரவை 2 ஆம் நாள் கூட்டம்..! மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்..!

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது.  தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நேற்று காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கியது.

இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் ரவி தனது உரையை நிகழ்த்துவார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது ஏமாற்றத்தில் தான் முடிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவினரும் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கிய கூட்டத்தொடரில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் முன்னிலையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன், ஏ வி எம் சரவணன், எம்எல்ஏ கே. பொன்னுசாமி உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: வரும் 24ம் தேதி வரை சட்டசபை நடைபெறும்... எல்லாமே மரபுப்படி தான் நடக்குது...! அப்பாவு பேட்டி..!

மேலும், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான அருணாச்சலம் வெள்ளையன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எல். கணேசன் உள்ளிட்டோர் மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் நாளை கூடும் எனக் கூறி சபாநாயகர் அப்பாவு பேரவையை ஒத்தி வைத்தார். 

 

இதையும் படிங்க: ஜி ராம் ஜி மூலம் ரூ. 5000 கோடி கூடுதல் செலவு... ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share