எதிர்த்து பேசினால்தான் எதிர்க்கட்சியா..? உதயநிதிக்கு பேரவையில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!
சட்டசபையில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றினார்.
தமிழக சட்டப்பேரவை மூன்றாம் நாள் அமர்வு என்று கூடியது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது நிரந்தரமாக என் நெஞ்சில் குடி இருக்கும் தமிழக மக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி என்று தெரிவித்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்ததற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மக்கள் பணி செய்வது தான் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை என்று கூறினார்.
மாநிலம் சார்ந்த விவகாரங்களில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழகம் முதன்மையானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். தன்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து வெற்றி பெற வைத்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கும், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். மக்கள் பணி செய்வதுதான் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முதல் கடமை என்று கூறினார். சினிமா கேரியரில் தான் முன்னேறியதற்கு தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் காரணம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தான் படப்பிடிப்பிலிருந்து நேரடியாக இங்கு வந்ததைப் போல இமேஜை கிரியேட் செய்கிறார்கள் என்றும் அது ரீல்தான் ரியல் கிடையாது எனவும் கூறியுள்ளார். 1990களில் ரசிகர் மன்றமாக இருந்த போதே மக்களுக்கு நன்மை செய்தோம் என்றும் இலங்கை தமிழர் நலனுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாகவும், கல்வி, வெள்ளம், கொரோனா, நூலகம் என பல திட்டங்களை தொடர்ந்து செய்து வந்தோம் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சட்டசபை 2026: பெரும் எதிர்பார்ப்புடன் 3 ஆம் நாள் அமர்வு தொடக்கம்..!! முதல்வர் விஜய் என்ன பேசுவார்...?
விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல வழிகளில் மக்களுக்கு உதவி இருப்பதாக தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார். பெரியாரின் கடவுள் மறுப்புகள் வீர மற்ற அனைத்தையும் ஏற்பதாக அறிவித்தோம் என்றும் 2 பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக அறிவித்த ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "சரித்திரம்"... ஒரு நிமிடம் கூட BREAK இல்ல..! பேரவை நேரலை ஒளிபரப்பில் சாதனை..!!