“தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது தமிழன்னைக்கு மரியாதை” ..! விஜய் தீர்மானத்தை ஆதரித்த இபிஎஸ்..!!
தமிழ் தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை ஆதரித்து EPS உரையாற்றினார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன.
இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனி தீர்மானத்தின் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ் மொழியின் தொன்மை மற்றும் பண்பாட்டின் அடையாளம் என்று அவர் குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படுவது தமிழர்களின் உணர்வு தொடர்புடையது என்று கூறினார்.
இதையும் படிங்க: முந்தைய திமுக அரசைப் போல மோதல் போக்கு வேண்டாம்" - முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் அறிவுரை!
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது நமது தாய்மொழிக்கான மரியாதைய என்றும் யாருக்கும் எதிரானதல்ல எனவும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது என்பது தமிழ் அன்னைக்கு செலுத்தும் மரியாதை என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்றும் தேசப்பற்று மொழி பற்றும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல எனவும் கூறியுள்ளார். இந்த தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதி கைதால் கொந்தளிப்பில் தமிழகம்..!! சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த முதல்வர் விஜய்!!