×
 

பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆன்லைன் உரிமம் ... பேரவையில் அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு.!

சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பட்டாசு தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் இணைய வழியாக உரிமம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் உரிம விண்ணப்பங்கள் முதல் ஒப்புதல் வரை அனைத்து நிலைகளும் வெளிப்படையாகவும் விரைவாகவும் நடைபெறும்.

அதிகாரிகளின் நேரடி தலையீடு குறைக்கப்பட்டு, தாமதமும் ஊழல் வாய்ப்புகளும் தவிர்க்கப்படும் என்பது இதன் முக்கிய நோக்கமாகும். பட்டாசுத் தொழில் சிவகாசி பகுதியின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதால், இந்த சீர்திருத்தம் தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரம் பட்டாசுத் தொழிலில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் உயிரைக் காக்கும் வகையில் சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான சிறப்பு வார்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடுமையான தீக்காயங்களுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடி மற்றும் உயர்தர சிகிச்சை அளிக்க முடியும். இதற்கு இணையாக அதே மருத்துவமனையில் தோல் வங்கி (ஸ்கின் பேங்க்) அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தோல் மாற்று சிகிச்சைக்கு இந்த வங்கி பெரும் உதவியாக இருக்கும். இறந்தவர்களிடமிருந்து தானமாகப் பெறப்படும் தோலைப் பாதுகாத்து வைத்து, தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்தும் வசதி உருவாக்கப்படுவதால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதையும் படிங்க: எம்எல்ஏக்களுக்கு ராக்கி கட்டி உற்சாகம்..! பேரவை வளாகத்தில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய அமைச்சர் கீர்த்தனா..!

மேலும் விபத்து நேரங்களில் விரைவாக செயல்பட கூடுதல் தீயணைப்பு நிலையம் அமைக்கவும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளால் பல உயிர்கள் பறிபோவதும், பலர் கடுமையான காயங்களுடன் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இந்த நிலையை மாற்றவே அரசு இத்தகைய விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க: வரலாற்றை திரித்த அமைச்சர் கீர்த்தனா.! வாஜ்பாயை அசிங்கப்படுத்துவதா.? நயினார் கண்டனம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share