"நமது வளம் நமது மக்களுக்கே"..! கனிமவள விவகாரத்தில் எடப்பாடி vs பிரபு – பேரவையில் பரபரப்பு
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு அமைச்சர் பிரபு பதிலளித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தலைவர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். 38 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏழு புதிய செவிலியர்கள் அமைக்கப்படும் என்று முதல் வரிசை அறிவித்தார்.
பெரம்பூரில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான் ஒரு படுகைகளை கொண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு ஐந்து லட்ச ரூபாய் எழுந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். இதேபோல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆட்சி அமைந்த பின் கனிமவளத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தார்.
தவறு செய்த குவாரிகள் மூடப்பட்டுள்ளதால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது நிறைய திட்டங்கள் அறிவித்திருக்கிறீர்கள். தேவையை நிவர்த்தி செய்ய என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: #BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!
தமிழக கனிமவளங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று கொண்டிருந்தது என்று அமைச்சர் பிரபு தெரிவித்தார். நமது வளங்களை நமது மக்களுக்கு தர வேண்டும் என்பதற்காக, அண்டை மாநிலங்களுக்கு தடை போட்ட ஒரே முதல்வர் நமது முதல்வர். இது போன்று பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம், மானியக் கோரிக்கையில் விளக்குகிறேன் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 45 ஆயிரம் கி.மீ சாலைகள்… ரூ.500 கோடி கேமராக்கள்.! திருநர்களுக்கு தனி போட்டிகள்..!! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள்..!!