×
 

45 ஆயிரம் கி.மீ சாலைகள்… ரூ.500 கோடி கேமராக்கள்.! திருநர்களுக்கு தனி போட்டிகள்..!! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள்..!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக திருநர்கள் விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்து பேசியபோது இதனை தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் தங்கம் வெல்போருக்கு 5 கோடி ரூபாயும் வெள்ளிப் பதக்கம் என்றால் மூன்று கோடி ரூபாய் பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 45 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப்பாதையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

45 ஆயிரம் கிலோமீட்டர் அளவிலான சிறிய சாலைகளை இருவழிப் பாதையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் 25 கோடி ரூபாய் மதிப்பில் நேரு உள்விளையாட்டு அரங்கம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். சென்னை முதல் குமரி வரை எட்டு வழி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவு படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை - கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தொட விரைவுச்சாலை உருவாக்கப்படும் என்றும் 500 கோடி ரூபாயில் கேமராக்கள் பொருத்தி சாலை விதிகளை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நம் சாலை செயலியை உள்ளடக்கிய சீரான சாலை திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் சென்னை, மாமல்லபுரம், புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்ட சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!

வியாசர்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும் என்றும் முதல் எட்டு மாதங்களில் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவித்தார். பேசின் பிரிட்ஜ் சந்திப்பில் அமைந்துள்ள குறுகலான பாலங்கள் அகலப்படுத்தப்படும் என்றும் ஊரக சாலைகளை மேம்படுத்த 2550 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சிங்கப்பெண் திருவிழா நடத்தப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "விஜய் ஆட்சி பொற்காலம்"... முதல் போராட்டமே விவசாயிகளுக்காக தான்..! பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share