மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!
உயர் கல்வித் துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியது. முதலில் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதனை ஏற்க சபாநாயகர் மறுத்ததால் வெளிநடப்பு செய்தனர். பிறகு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது.
இதற்கிடையில்bதமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். மாணவர்கள் உயர்கல்வி பெற 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 6000 பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பு ஊதியம் 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். பத்து அரசு கல்லூரிகள் தன்னாட்சி பெற்ற கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். கலை அறிவியல் கல்லூரிகளில் தளவாடங்கள் வாங்க 36 கோடியே இருபத்தி ஆறு லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கடந்த ஆட்சியில் லஞ்சம் வாங்கினார்கள்..! நானே சாட்சி..! பேரவையில் அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு..!!
அரசு கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்தார். தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்காக ஒரு தனி சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் கவன ஈர்ப்பு தீர்மானம்..! முடியவே முடியாது.! சபாநாயகரை கண்டித்து திமுக வெளிநடப்பு..!!