×
 

குண்டும் குழியுமான சாலைகள்.! பராமரிப்பில்லாத அரசு கட்டிடங்கள்..! பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் உரை..!!

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீது பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அப்போது நான் தேசிய அளவில் தடகள வீராங்கனையாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். பல கோடி செலவில் கட்டப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மேம்பாலங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். நெடுஞ்சாலை நகரம் ஊராட்சி பேரூராட்சி கிராமங்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழக முழுவதும் உள்ள அரசு கட்டிடங்கள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார். விளையாட்டு துறை என்பது மாணவர்களுக்கு மிக முக்கியமானது என்றும் இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புற மைதானங்களை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அனைத்து அரசு கட்டிடங்களும் மோசமான நிலையில் தான் இருக்கிறது எனவும் உடனடியாக சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அனைத்து அரசு கட்டிடங்களையும் தனியார் கட்டிடங்களுக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாரம்பரிய கட்டடங்களை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரேமலதா விஜயகாந்த் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அரசு கட்டிடங்களை சிறந்த முறையில் புனரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பாஜகவும் காங்கிரசும் ஒன்றுதான்..! "அரசியல் ஆதாயம்"..! சட்டப்பேரவையில் சிவி சண்முகம் உரை..!

விருதாச்சலம் அரசு அட்சகம் கால்நடை இயக்குனர் அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சாலை பராமரிப்பை கவனத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார். நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: “விரல் நுனியில் தகவல் இருக்காம்"... சாலைப்பணிகளின் நிதி விவரம் எங்கே? எ.வ.வேலு கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share