"தாய்மாமன் காது குத்தும் திட்டம்"..! வாக்குறுதி என்னாச்சு..? பேரவையில் உதயநிதி சரமாரி கேள்வி..!!
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பல துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை மற்றும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் என் அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழி என்பதை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்து பேசினார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது முதல்வருக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். படிப்போடும் தந்திரம் இல்லாமல் முதலமைச்சர் பதிலளிப்பார் என்ற நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் சாதிய கொலைகள் குறைந்துள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறியுள்ளீர்கள் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் குற்றங்கள் குறைந்துள்ளது என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி என தெரிவித்துள்ளார். முந்தைய ஆண்டுகளை விட திமுக ஆட்சியில் சாதிய பாகுபாடு பாலியல் குற்றங்கள் குறைந்திருப்பதாக ஒப்புக்கொண்டிருப்பதாகவும் பெயர் மாற்ற அறிவிப்பு அல்லது திட்டம் ரத்து என்ற அறிவிப்புதான் வருகிறது எனவும் கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் ஆட்சியில் ஒன்று பழைய திட்டத்தை ரத்து செய்கிறீர்கள் இல்லை பழைய திட்டத்தை தொடர்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்கள் மீது பழி போடாமல் பதில் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழக வெற்றி கழகத்தின் 116 நாட்கள் ஆட்சியில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!
திமுக ஆட்சியில் தமிழ்நாடு டாப் கியரில் சென்று கொண்டிருந்தது என்றும் குறிப்பிட்டார். தாய்மாமன் காது குத்து திட்டம் என பெயர் மாற்றம் செய்யலாம் என்றும் முழு பயிர் கடன் தள்ளுபடி, ஆறு இலவச சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம் போன்ற அறிவிப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பினார். கொடுத்த வாக்குறுதிகளை பாதி பாதியாக நிறைவேற்றுவது ஏன் என்றும் அனைத்து திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கும் தமிழக வெற்றிக்கழக அரசு தாய் மாமன் காது குத்தும் திட்டம் என்ற மொத்தமாக பெயரிடலாம் என விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.! ஒலிம்பிக் நகரம், மோட்டார் சிட்டி..!! பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!