ரிதன்யா தற்கொலை வழக்கு... கணவர், மாமனார், மாமியாருக்கு ஜாமீன் கிடைத்ததா? நீதிமன்றம் அதிரடி!!
ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர் கவின்குமார் மற்றும் அவரது மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிப்புதூரைச் சேர்ந்தவர் ரிதன்யா. 27 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதியன்று அன்று கவின் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது, அவரது பெற்றோர் 300 சவரன் நகையையும், சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரையும் வரதட்சணையாக வழங்கியுள்ளனர்.
ஆனால் கணவர் கவின் குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, மற்றும் தாய் சித்ராதேவி ஆகியோர் கூடுதலாக 200 சவரன் நகையையும், பணத்தையும் கேட்டு ரிதன்யாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரிதன்யா, ஜூன் 28 ஆம் தேதி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு, ரிதன்யா தனது பெற்றோருக்கு உருக்கமான ஆடியோ செய்திகளை அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க: பிறப்புறுப்பில் மிளகாய் தூள்... அரக்கத்தனத்தின் உச்சம்! காளியம்மாள் பரபர பிரஸ்மீட்..!
இந்த ஆடியோக்களில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனக்கு அளித்த கொடுமைகளை ரிதன்யா பதிவு செய்திருந்தார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த 4 ஆம் தேதி மாமியார் சித்ரா தேவியையும் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூன்று பேரும் தங்களுக்கு ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: எனக்கு இந்த லைஃப் வேணாம்.. மனதை ரணமாக்கும் மரண வாக்குமூலம்! புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!