×
 

"பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!

சமையல் செய்துக் கொடுக்காமல் ரீல்ஸ் மட்டும் போட்டுக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் ஒன்று அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கும்பல்கோடு பகுதி ஜெருபால்யாவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த 24 வயது தீரஜ் குமார் தனது மனைவி 20 வயது ரீமா குமாரியை கொலை செய்து உடலை போர்வையில் மறைத்து வைத்துவிட்டு பீகாருக்கு தப்பி ஓடியிருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

தீரஜ் மற்றும் ரீமா இருவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள். சுமார் பத்து மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தினருக்குத் தெரியாமல் ஓடிவந்து பெங்களூருக்கு வந்து அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். ஆரம்பத்தில் காதல் திருமணமாக இருந்தாலும், பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டன.தீரஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின்படி, திருமணத்திற்குப் பிறகு ரீமா அவரைப் புறக்கணிக்கத் தொடங்கினார்.

அவர் பெரும்பாலும் மொபைல் போனில் மூழ்கியிருந்து ரீல்ஸ் போடுவதில் அதிக கவனம் செலுத்தினார். வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டாமல், தீரஜுக்கு சமைத்துக் கொடுக்காமல் தனக்காக மட்டும் உணவு தயாரித்து சாப்பிட்டுவிடுவது வழக்கமாகி இருக்கிறது. இரவில் தீரஜ் வேலையிலிருந்து திரும்பும்போது அவருக்கு உணவு வழங்காமல் இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்தன.சம்பவ நாளன்று மீண்டும் சண்டை ஏற்பட்டது.

இதையும் படிங்க: மதுபோதையில் நண்பனின் ஆடைகளை கலைந்து... சக நண்பர்கள் கூட்டு சேர்ந்து செய்த கொடூரம்... தேனியில் பரபரப்பு...!

அப்போது ரீமா தீரஜை ஒரு குச்சியால் அடித்ததாக கூறப்படுகிறது. கோபமடைந்த தீரஜ் ரீமாவின் துப்பட்டாவைக் கொண்டு அவளை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் உடலின் முகத்தை பிளாஸ்டிக் மூடி, போர்வையில் மறைத்து வீட்டின் கழிப்பறை அருகே வைத்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு பீகாருக்குத் தப்பி ஓடினார். ரீமா வேலைக்கு வராததால் அவரது சக ஊழியர் ஒருவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கடுமையான துர்நாற்றம் வீசியது.

வீட்டு உரிமையாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் ரீமாவின் உடல் போர்வையில் மூடப்பட்டுக் கிடந்தது. உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கும்பல்கோடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.தீரஜ் பீகாருக்குத் தப்பிச் சென்றதை அறிந்த போலீசார் சிறப்புக் குழுவை அனுப்பி அவரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பகீர் கிளப்பிய நாங்குநேரி கொலை வழக்கு..!! ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share