ஓபிஎஸுக்கு நோ சொன்ன பிரதமர் மோடி.. ஹேப்பி மோடில் எடப்பாடி..!
தூத்துக்குடியில் பிரதமர் மோடியைச் சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரை வரவேற்க அனுமதி கேட்ட ஓ.பி.எஸ்க்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுவேன்." என தெரிவித்திருந்தார்.
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி தூத்துக்குடி வர உள்ள நிலையில், இதுவரை அவரை வரவேற்க அனுமதி கேட்டு கடிதம் எழுதிய ஓபிஎஸ்-க்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இப்பயும் NDA கூட்டணியில் இருக்கீங்களா? மழுப்பலாக பதிலளித்த ஓபிஎஸ்..!
தூத்துக்குடி விமான நிலையம் வரும் பிரதமரை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ,மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், பொன் ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, உள்ளிட்டோருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு ஆகியோர்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பதாக ஓபிஎஸ் சொல்லிவரும் நிலையில் பிரதமரை வரவேற்க அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்பது அவருடைய ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் திருச்சியில் சந்திக்க அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அதுவும் உறுதியாக வில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் மோடி, நாளை தூத்துக்குடி வரும்போது, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனை சந்திக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இருவரையும் சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்காமல் பிரதமர் அலுவலகம் உள்ளதால் கூட்டணியில் கடும் குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த முடிவால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஹேப்பி மோடில் இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!