×
 

மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

அடுத்த முறை இந்தியா வரும்போது, பிரதமர் மோடிக்கும் இந்தியாவுக்கும் அந்த சிறப்பு பரிசு நிச்சயம் வழங்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசு வழங்குவதற்காக பெல்ஜியம் பிரதமர் கொண்டு வந்த வித்தியாசமான சாக்லெட், எதிர்பாராத விதமாக உருகி உடைந்ததால் அதை அவரிடம் வழங்க முடியாத சம்பவம் கவனம் பெற்றுள்ளது.

பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக்காக அவர் தனது நாட்டின் சார்பில் சிறப்பு பரிசு ஒன்றையும் கொண்டு வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த பரிசு, இந்தியாவின் புகழ்பெற்ற இந்தியா கேட் நினைவுச்சின்னத்தின் வடிவில் உருவாக்கப்பட்ட சாக்லெட் ஆகும். இந்தியாவுக்கான பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு இதை வழங்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது.

இதையும் படிங்க: மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

ஆனால், எதிர்பாராத வகையில் அந்த சாக்லெட் உருகி உடைந்துவிட்டது. இதனால், அதன் அசல் வடிவம் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு அதை பரிசாக வழங்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பெல்ஜியம் பிரதமரின் இந்திய பயணத்தின்போது அந்த வித்தியாசமான பரிசு பிரதமர் மோடியிடம் சேரவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக பெல்ஜியம் தூதரகம் தரப்பில் விளக்கமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை இந்தியா வரும்போது, பிரதமர் மோடிக்கும் இந்தியாவுக்கும் அந்த சிறப்பு பரிசு நிச்சயம் வழங்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நாட்டின் கலாசாரத்தை மற்றொரு நாட்டுக்கு எடுத்துச் செல்லும் வகையில் பரிசுகள் வழங்கப்படுவது அரசு முறை சந்திப்புகளில் வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், இந்தியா கேட் வடிவிலான சாக்லெட் பரிசு, இந்தியாவுடனான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆனால், மோடிக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட பரிசு, அவரைச் சந்திக்கும் முன்பே சேதமடைந்தது எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது. தற்போது அந்தப் பரிசை மீண்டும் தயாரித்து, அடுத்த பயணத்தில் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மெலோனி–மோடி நட்பு மீண்டும் டிரெண்டிங்! இத்தாலி பிரதமருக்கு கிடைத்த ஸ்பெஷல் வாழ்த்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share