×
 

"அரசு மரியாதையுடன் இயக்குநர் இமயத்திற்கு அஞ்சலி"..! தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

இயக்குனர் பாரதிராஜாவின் இறுதி அஞ்சலி அரசு மரியாதை உடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.

இதையும் படிங்க: கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார். திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று திரையுலகினர் வலியுறுத்தினர். தமிழக அரசின் கலை மாமணி விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை குவித்த பாரதிராஜாவின் இறுதி அஞ்சலி அரசு மரியாதை உடன் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். பாரதிராஜா காலமான செய்தி மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: போலீசாருக்கு SPECIAL ட்ரீட்...? சிங்கப்பெண் படை தொடக்க விழாவில் விஜய் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share