×
 

"சரிந்தது இமயம்"... காலத்தால் அழியாத காவிய கலைஞன்..! பாரதிராஜா உடல் நாளை நல்லடக்கம்..!!

தேனியில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இயக்குநர் சிகரம் பாரதிராஜா இன்று காலமானார். அவரது இழப்பு திரை துறையினர் உட்பட அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்த பாரதிராஜா, 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை இயக்கினார்.

அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.

கடந்த சில வருடங்களாக படங்களில் நடித்து வந்தவர், தனது மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முடங்கிப் போனார். உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார். திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று திரையுலகினர் வலியுறுத்தினர். தமிழக அரசின் கலை மாமணி விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை குவித்த பாரதிராஜாவின் இறுதி அஞ்சலி அரசு மரியாதை உடன் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "யதார்த்த சினிமாவின் அடையாளமே"..! இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு ஸ்டாலின், EPS உள்ளிட்டோர் இரங்கல்..!!

முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பதற்கு பாரதிராஜாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாரதிராஜாவின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வத்தலகுண்டு வில் உள்ள பண்ணை வீட்டில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: இயக்குநர் இமயத்திற்கு இறுதி மரியாதை; பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share