ரெட் அலர்ட் எதிரொலி.. பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு பறந்த எச்சரிக்கை..!
மேட்டுப்பாளையம் சிறுமுகை காரமடை கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணை ஜூன் மாதம் நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை நீலகிரி மாவட்டங்களில் இன்றும் ரெட் அலர்ட் தொடர்வதால் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு கூடுதலாக அணைக்கு தண்ணீர் வரக்கூடிய நிலை உள்ளது . பொதுமக்கள் பவானி ஆற்றில் கரையோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கிய நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகளிலும் அதிக அளவு மழைப்பொழிவு ஒரே நாளில் இருந்த காரணத்தினால் பில்லூர் அணையின் உடைய நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து ஒரே நாளில் முழு கொள்ளளவை எட்டியது .
இதையும் படிங்க: வெளுத்து வாங்கும் மழை! அருவிகளில் காற்றாற்று வெள்ளம்...
அணையில் 100 அடி தண்ணீர் திறக்க முடியும் ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 97 அடியை எட்டியவுடன் மேல்மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது காலை ஐந்து மணி நிலவரப்படி 16,000 கன அடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது இந்த தண்ணீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்து விடப்படுவதால் கரை வர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள் .மேலும் பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
இன்றும் ரெட் அலர்ட் நீலகிரி மாவட்டத்தில் தொடர்வதால் அதிக அளவு மழைப்பொழிவு இருந்தால் அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாக திறக்கக்கூடிய சூழ்நிலை இருக்கக்கூடிய காரணத்தினால் எக்காரணத்தைக் கொண்டு பவானி ஆற்றில் குளிக்கவும் துணி துவைக்கவும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவும் செல்லக்கூடாது என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்
இதையும் படிங்க: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. 36 மணி நேரத்தில் சம்பவம் உறுதி...!