சூடுபிடிக்கும் அரசியல் களம்... இன்று வெளியாகிறது பீகார் வாக்காளர் இறுதிப் பட்டியல்...!
திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பீகாரின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.
இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த செயல்முறை மூலம், தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. ஆனால், சில சமயங்களில் இந்தப் பணிகள் அரசியல் கட்சிகளிடையே சர்ச்சைகளை உருவாக்குவதுண்டு. இதேபோல், 2024-2025 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் புனையப்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பீகார் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதன்படி பீஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் மும்முரமாக நடைபெற்றது. இந்த நிலையில், பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு பெற்ற நிலையில், பீகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
இதையும் படிங்க: சொல்லி அடிக்கும் ராகுல்... எப்படி வாக்கு திருடுறாங்க தெரியுமா? விளக்கம் கொடுத்த காங்கிரஸ்
இறுதி வாக்காளர்கள் பட்டியலில் சுமார் 68.6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR நடவடிக்கைக்கு முன் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடியாக இருந்த நிலையில், தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளதாகவும் 21.53 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி… கரூருக்கு நிர்மலா சீதாராமன் DIRECT VISIT…!