SILENT- ஆ செய்வாங்க! பீகார் முடிவு அனைவருக்குமான எச்சரிக்கை... கேரளா காங்கிரஸ் கருத்து...!
பீகார் தேர்தல் முடிவு அனைவருக்கும் மான எச்சரிக்கை என கேரளா காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்தது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. பெரும்பான்மையின் நிரூபித்து பாஜக பல்வேறு இடங்களில் வெற்றியடைந்தது. காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தை கண்டது. இதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.
பீகாரில் பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. நிதீஷ் குமாரின் ஆதரவு இல்லாமலேயே பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பீகாரின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை கேரளா காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
பீகாரில் NDA வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளின் வெற்றி SIR அடிப்படையிலான வாக்கு நீக்கத்தில் விளைந்திருக்கிறது என்று கூறியுள்ளது. சட்டவிரோத குடியேறிகளை நீக்குவதாக சொல்லி, NDA ஆட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை, விளிம்புநிலை வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்கள் முடிவை ஏற்கிறோம்... ஆனால்..! காங்கிரஸ் கட்சி கொடுத்த நம்பிக்கை...!
இந்த விளையாட்டை நாம் புரிந்து கொள்ளவில்லை எனில், நம் ஒவ்வொருவரையும் சத்தமின்றி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, போலி வாக்காளர்களை சேர்த்து, அவர்களின் பெயர்களில் வாக்களித்து எல்லா காலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கும் என்று கேரளா காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி... செல்வப் பெருந்தொகை பதிலடி...!