அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி... செல்வப் பெருந்தொகை பதிலடி...!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில் ஊருக்கும் தேவையில்லை என்றும் கூறினார்.
தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி எனவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும் எனவும் கூறினார். அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என கூறிய ராஜேந்திர பாலாஜி, பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும் என்றும் தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர் என்று கூறினார். ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: டிஜிபி ஆபீசுக்கு பறந்த வெடிகுண்டு மிரட்டல்… சோதனையே வேண்டாம்! நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு…!
காங்கிரஸ் கட்சியை கலைத்து விடலாம் என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 1996-ல் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது என செல்ல பெருந்தகை கேள்வி எழுப்பினார். நாங்களெல்லாம் எங்களது சொந்த தந்தை தான் தாடி என அழைப்போம் என்றும் காங்கிரஸ் குறித்து தனது கருத்தை திரும்ப பெற்று ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதி வாரிய கணக்கெடுப்பு... திருமா, செல்வப்பெருந்தகையை சீண்டிய அன்புமணி...!