தேர்தல் வருது… ரூ.10 லட்சம் கொடு! அண்ணாமலையின் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டல்… பகீர் கிளப்பும் வீடியோ…!
அண்ணாமலையின் பெயரைச் சொல்லி பாஜகவினர் பணம் கேட்டும் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
கே. அண்ணாமலை, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். அவரது தலைமையில், பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தல் களத்தில் போட்டியிடுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. அவரது ஆக்ரோஷமான அரசியல் பாணி, திமுக அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள், மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிகள் ஆகியவை பாஜகவின் புலப்படுத்தலை அதிகரித்தன.
2024 மக்களவைத் தேர்தலில் கட்சியின் வாக்கு விழுக்காடு 18%ஐத் தாண்டியது அவரது தலைமையின் முக்கிய சாதனையாகக் கருதப்பட்டது. அரசியல் களத்தில் செல்வாக்கு மிக்கவராக திகழும் அண்ணாமலையின் பெயரை கூறி பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் பாஜகவினர் 10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் புகார் கூறி உள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் குற்றம்சாட்டினார். கடந்த 2023 ஆம் ஆண்டு திருமூர்த்தி என்பவர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் அவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமூர்த்தி இறப்புக்கு இழப்பீடு வாங்குவது தொடர்பான வழக்கில் பாஜகவினர் உதவியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமூர்த்தி இறப்புக்கு இழப்பீடு வாங்குவது தொடர்பான வழக்கை நடத்த பாஜகவினர் ஏற்கனவே 10 லட்சம் பெற்றதாக இளைஞர் புகார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடிமை அதிமுக, ஒட்டுண்ணி பாஜக... தமிழ்நாட்டு மீனவர்கள்-னா எளக்காரமா? லெப்ட் ரைட் வாங்கிய முதல்வர்…!
தற்போது மேலும் 10 லட்சம் கேட்டு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுவதாக திருமூர்த்தி சகோதரர் வீடியோ வெளியிட்டு புகார் தெரிவித்தார். தேர்தல் நெருங்குகிறது… பணம் கொடு என பாஜகவை சேர்ந்த கோகுல கண்ணன், மற்றும் சாமிநாதன் ஆகியோர் மிரட்டுவதாக அந்த இளைஞர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதையும் படிங்க: உங்க நிலை புரியுது... மீண்டு வாங்க விஜய்! பாஜக அமர் பிரசாத் ஆறுதல்…!