"மூன்றிலிருந்து ஐந்து வேணும்"... அதிமுக அடிமடியில் கைவைத்த பாஜக... ஷாக்கில் இபிஎஸ்...!
இந்த முறை கோவையில் இருந்து தங்களுக்கு குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகளாவது வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளார்களாம்.
2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளுமே கூட்டணிகளை கட்டமைப்பது, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்துவது என மும்முரம் காட்டி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக-வும் ஆண்ட கட்சியான அதிமுக-வும் மற்றவர்களை விட ஒருபடி மேலாகவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுகவும், “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுகவும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளன. மற்றொருபுறம் கூட்டணி கட்சிகளை வளைப்பது, தொகுதி பங்கீடு போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியை கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பாஜக தேசிய துணைத் தலைவரும், பாஜக மேலிட பொறுப்பாளருமான பைஜெயந்த் பாண்டா மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பான டெல்லி தலைமையின் விருப்பத்தை எடப்பாடியாரிடம் எடுத்துரைத்தவர்கள், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சு கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்கள முதல்வர் ஆக்கவா விஜய் கட்சி ஆரம்பிச்சாரு? இபிஎஸ்க்கு டிடிவி சரமாரி கேள்வி…!
அப்போது இந்த முறை பாஜகவிற்கு வலிமையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என்கிற வகையில 50க்கும் குறைவில்லாத தொகுதிகள் வேணும் அப்படின்னும் பேசி இருக்காங்க. இரண்டாவது கோரிக்கையாக மேற்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக பாஜக தலைமை வைத்த கோரிக்கையைக் கேட்டு தான் அதிமுக ஆட்டம் கண்டுள்ளதாம். அதிமுகவின் கோட்டையும், கொங்கு மண்டலமுமான கோவையி ல் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் பாஜகவிற்கு கடந்த முறை ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் நூலிழையில் வெற்றி வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டார். அதேபோல் அடுத்த முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்ட அண்ணாமலை கணிசமான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதனால் கோவையில் தங்களுக்கு கூடுதல் மவுசு இருப்பதாக பாஜக நம்புகிறது.
அதனால் இந்த முறை கோவையில் இருந்து தங்களுக்கு குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகளாவது வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளார்களாம். குறைஞ்சது 3 தொகுதியையாவது பாஜக வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை கறாராக வலியுறுத்தியுள்ளார்களாம். இதைக் கேட்ட எடப்பாடி பழனிசாமி தலையில் இடி இறங்கியது போல் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம். அதிமுகவின் கோட்டையிலேயே கைவைக்க பார்க்கும் பாஜகவின் பிளானால் இபிஎஸ் படு அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மருந்து விவகாரம்... என்னென்ன செஞ்சீங்க? திமுக அரசுக்கு எதிர்க்கட்சியின் 5 முக்கிய கேள்விகள்...!