மருந்து விவகாரம்... என்னென்ன செஞ்சீங்க? திமுக அரசுக்கு எதிர்க்கட்சியின் 5 முக்கிய கேள்விகள்...!
மருந்து விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு 5 முக்கிய கேள்விகளை அதிமுக எழுப்பி உள்ளது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மருந்து ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்து மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை வழங்கி இருந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில், கோல்ட்ரிப் இருமல் மருந்தை சரியாக ஆய்வு செய்யாத இரண்டு தர ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார். கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விசாரணைக்கு பின் கோல்ட் ரிப் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார்.
மருந்து விவகாரம் தொடர்பாக அதிமுக சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. 21 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழக்கக் காரணமான மருந்து நிறுவனத்தின் லைசன்ஸ் திரும்பப் பெறப்படுவதாக திமுக அரசு அறிவித்த பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என கேட்டுள்ளது. மருத்துவத் துறை சார்பில் சுற்றறிக்கை, அல்லது அரசாணை ஏதேனும் வெளியிடப் பட்டதா என்றும் ஏற்கனவே மருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டீர்களா எனவும் கேட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜி.டி நாயுடு பிரிட்ஜ்க்கு நிதி ஒதுக்கியதே இபிஎஸ் தான்... அதிமுகவினர் கொண்டாட்டம்...!
தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகளில் இருந்து Sresan நிறுவன மருந்துகள் முழுமையாக அகற்றப்பட்டதை திமுக அரசு உறுதி செய்ததா என கேள்வி எழுப்பி உள்ளது. முதல்வருக்கு ப்ரோமோஷன் செய்ய அவ்வப்போது விளம்பரம் கொடுக்கிறீர்களே., 21 அப்பாவி குழந்தைகள் உயிரிழக்க் காரணமான இந்த நிறுவன மருந்துகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவது குறித்து செய்தித் தாள்களில், ஊடகங்களில் ஏதேனும் விளம்பரம் வெளியிட்டீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: இருமல் மருந்து விவகாரம்... திமுகவுக்கு இதுலயும் அரசியலா? பந்தாடிய அதிமுக