MGRக்கு இலங்கையில் நினைவுச் சின்னம்..! பாஜக அரசுக்கு வேலுமணி வைத்த கோரிக்கை.!!
எம்ஜிஆருக்கு இலங்கையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று எஸ் பி வேலுமணி வலியுறுத்தினார்.
அதிமுக முன்னணித் தலைவர் எஸ்.பி.வேலுமணி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த இடமான இலங்கை கண்டி மாவட்டம் நாவலப்பட்டி கிராமத்தில் உள்ள இல்லத்தைப் புணரமைத்து நினைவுச் சின்னமாக மாற்றும் முயற்சியைத் தொடங்கியுள்ளார். இதற்காக இலங்கை அரசின் அனுமதி பெறும் வகையில் ஏற்கனவே விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையின் கண்டி பகுதியில் பிறந்தார்.
அவரது குழந்தைப் பருவத்திலேயே குடும்பம் இந்தியாவுக்குத் திரும்பியது. தமிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அழியாத இடத்தைப் பிடித்த அவரது பிறந்த இடத்தை நினைவுச் சின்னமாக மாற்றுவது அவசியம் என்றும் வேலுமணி கூறியுள்ளார். இந்தத் திட்டத்திற்கு மத்திய பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு இலங்கை அரசிடமிருந்து அனுமதி பெற்றுத் தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல் இலங்கை அரசும் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கூடிய விரைவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ள அவர், இந்த நன்னாளில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையில் இலங்கையில் அவரது பிறந்த வீட்டைப் பாதுகாத்து நினைவுச் சின்னமாக மாற்றும் இந்த முயற்சி, தமிழகத்திலும் இலங்கையிலும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பெருமைமிகு வரலாறு..! அதிமுக 55 ஆம் ஆண்டு விழா..!! EPS உற்சாகம்.!
அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசின் அனுமதி கிடைத்தால், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் இந்த இடம் விரைவில் நினைவுச் சின்னமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!