ஒரு விசில் சப்தத்திற்கே ஆடிப்போயிட்டீங்களே! இதுதான் திராவிட மாடலா? தமிழக பாஜக கிண்டல்!
'ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல்' என, தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசில் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்ததை கடுமையாக விமர்சித்த தி.மு.க. துணைப் பொதுச் செயலர் ராஜாவுக்கு தமிழக பா.ஜ.க. பொருளாளர் சேகர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜா சமீபத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக சேகர் வெளியிட்ட அறிக்கையில், “ஏணியும் சிறுத்தையும் விசில் சத்தத்தில் கரைந்து போனதற்கு காழ்ப்புணர்வோடு புலம்புகிறார் ஈ.வெ.ராமசாமியின் பேரன் ராஜா. ஒரு விசில் சத்தத்துக்கே தாங்காமல் கரைந்தது ஒரு சித்தாந்தமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “தமிழக மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இல்லாத பிராமணர்களின் ஆதிக்கம் என்று பேசுபவரின் தாய்மொழி தெலுங்கு. ‘பிராமணர்கள் ஒழிக, தமிழன் ஒழிக, தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி’ என்று பேசியவரின் வழித்தோன்றல்கள் இன்று திராவிட சித்தாந்தத்தை காப்பாற்ற காலம் காத்திருக்கின்றனர்” என சேகர் தாக்குதல் நடத்தினார்.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச் போட்ட 5 நாளில் அடுத்த குறி! அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்!
“கடந்த 65 ஆண்டுகளாக தமிழனை புதைகுழியில் தள்ளியது போதாதா? ஒரு விசில் சத்தத்துக்கே ஆடிப்போன திராவிட மாடல், ஒப்பாரிகளின் ஒய்யாரக் கூடாரம். பயந்தாங்கொள்ளிகளின் விரிசல் மாளிகை” என சேகர் தன் அறிக்கையில் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார்.
ராஜாவை “புலம்புவதில் இன்னொரு ஆ.எஸ்.பாரதி ஆகிவிட்டார்” என கிண்டல் செய்த சேகர், “தி.மு.க. எனும் தீய்ந்து போன திருக்குவளை தீய சக்தி” எனவும் வர்ணித்தார்.
இந்த விவாதம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க. அரசின் கூட்டணி அமைப்பு முறையை தி.மு.க. தரப்பு தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், பா.ஜ.க.வின் இந்த கடுமையான எதிர்வினை இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
ஈ.வெ.ராமசாமி கொள்கைகள், தி.மு.க.வின் தற்போதைய நிலை மற்றும் புதிய அரசியல் சமன்பாடுகள் குறித்து அரசியல் பார்வையாளர்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்கம் திராவிட சித்தாந்தத்தின் வலிமையை பேசும் தி.மு.க., மறுபக்கம் அதன் பலவீனத்தை சுட்டிக்காட்டும் பா.ஜ.க. ஆகியவற்றுக்கு இடையேயான இந்த வார்த்தைப் போர் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன்!! முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சபதம்!