×
 

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக நிறுத்தும் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார். அதிமுகவின் வெற்றிக்காக பாஜக உழைக்கும் என உறுதியளித்துள்ளார்.

எதற்காக இந்த இடைத்தேர்தல் வந்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்றும் எங்ளுடைய கூட்டணியில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் தற்போது தவெகவில்போட்டியிடுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார் திங்கள்கிழமை வருகிறேன். யாரும் ஓடிவிட வேண்டாம் என சொன்ன முதல்வர் எதைப் பற்றியும் பேசவில்லை என்று கூறினார். எந்த சபாநாயகரும் பைபிளை குறிப்பிட்டு பேசியதில்லை என்றும் முதலமைச்சர் கிறிஸ்தவ மதத்திற்காக மட்டுமே இருக்கிறார். அவர்களுக்கு மட்டும்தான் இவர் முதலமைச்சரா? என கேட்டார்.

அமைச்சர் மரிய வில்சன் உட்பட மதசார்போடு இருந்துக் கொண்டு, மதசார்பற்ற அரசு என சொல்லலாமா? என்று கேள்வி எழுப்பினார். சட்டமன்ற மரபையே மீறியிருக்கிறார் என்று முதல்வர் விஜய் மீது குற்றம் சாட்டி உள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் செயல் அநாகரிகமானது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மண் சுரண்டல்..! கொஞ்சம் கூட அக்கறை இல்லையா.? மத்திய அரசை விளாசிய வேல்முருகன்.!

மிசா கைது தொடர்பாக திமுக தலைவர் பற்றி முதலமைச்சர் செய்த செயல் அநாகரிகமானது என்றும் சட்டப்பேரவையில் செய்திகள் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளிக்கவில்லை எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார். பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அவசியமற்றது என்று கூறிய அவர், பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் கட்டுவதால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share