×
 

கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

காவிரி நீர் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயனார் நாகேந்திரன் பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று காவிரி நீர் மேலாண்மை தொடர்பான முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 142-வது கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 57-வது கூட்டம் ஒரே நாளில் நடைபெற்றதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அவர் வரவேற்றுள்ளார். அந்த உத்தரவின்படி இன்று காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 6,000 கன அடி வீதம் மொத்தம் 7.776 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கர்நாடக காங்கிரஸ் அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஜூலை மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு உரிய நேரத்தில் முறையாக அமல்படுத்தாததால் தமிழகத்தின் குறுவை சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டினார். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நலிவடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திலேயே திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை நீர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திறக்கப்பட்டது.

கர்நாடக அரசின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என அவர் குற்றம் சாட்டினார். இதனால் குறுவை மற்றும் பிற சாகுபடி பயிர்கள் காய்ந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என அவர் கவலை தெரிவித்தார்.தமிழக விவசாயிகளுக்கும் விளைப்பயிர்களுக்கும் புத்துணர்வு அளிக்கும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையாவது கர்நாடக அரசு காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த வேண்டும் என நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். இதை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: வெற்று விளம்பரங்களை விட நெற்பயிர்கள் முக்கியம்... நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.!

கர்நாடக அரசால் தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படுவதை முதல்வர் வேடிக்கை பார்க்கக் கூடாது என அவர் எச்சரித்தார். கூட்டணிப் பாசத்தை விட விவசாயிகளின் வாழ்வாதாரமே முதன்மையானது என அவர் தெரிவித்தார்.காவிரி நீர் பங்கீடு தொடர்பான இந்த உத்தரவு தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கால தாமதங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே நாகேந்திரனின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தமிழகத்தின் வேளாண்மை நலன் காக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: சட்டமன்ற மன்றமா.? சினிமா ஸ்டுடியோவா.? தந்தை - மகன் கதை இப்ப தேவையா.? நயினார் சரமாரி கேள்வி.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share