"என்னய்யா நடக்குது தமிழகத்துல..." - ஒரே நாளில் 4 பாலியல் பலாத்காரம், 8 கொலைகள்... கொந்தளித்த நயினார்...!
பிரதமர் நரேந்திரமோடி ஆசியுடன் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. தேனி பரப்புரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் முழுவதும் வாகன பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தேனி வந்த நயினார் நாகேந்திரன் தேனி பங்களாமேடு பகுதியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேனி மாவட்டம் இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய மாவட்டம். இங்கு மருத்து கல்லூரியை கொண்டுவந்தது அதிமுக.
தமிழ்நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிச்சாமி நரேந்திரமோடி ஆசியுடன் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தவர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா இருந்தப்ப அந்த கட்சி நுழைய முடிஞ்சுதா? விளையாடுது பாஜக... திருமா. எச்சரிக்கை…!
தமிழக மக்கள் மீது திமுகவிற்கு எந்த ஒரு அக்கரையும் கிடையாது, அவர்களுக்கு இருக்கும் ஒரே அக்கரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவது தான் நோக்கம்.
தமிழகத்தில் பள்ளிக்கூடம் மட்டுமல்ல எங்க பார்த்தாலும் கஞ்சா. காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பும் இல்லை. 34 லாக்கப் மரணங்கள், 18,200 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளது. அண்மையில் கோவையில் கஞ்சா போதையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
கடந்த வாரம் ஒரே நாளில் மட்டும் 4 பாலியல் பலாத்காரம் , 8 கொலைகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளது. இந்த மோசமான ஆட்சியை மாற்றி அமைக்க வேண்டும் என்று தான் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் கரூருக்கு 12 மணிக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு இரவு ஏழு மணிக்கு வருகிறார். அந்த கூட்ட நெரிசலில் 41 நபர்கள் இறந்துள்ளனர். எப்படி இறந்தார்கள் என்றால் முன்னாள் அமைச்சர் ஒருவர் தூண்டுதல் பெயரில் நடந்துள்ளது.
திமுக கூட்டம் நடந்தால் அங்கு உள்ள டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் நடக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கூட்டம் நடந்தால் அங்கு உள்ள டாஸ்மாகில் வியாபாரம் நடக்காது. இந்த ஆட்சியின் மீது இருக்கும் வெறுப்பு எங்கள் மீது பாசமாக மாறி இருக்கிறது.
ஒரு கருத்துக் கணிப்பில் திமுக வை விட 10 சதவீதம் அதிகமாக தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது.
இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது. ஒரு விவசாயி இறந்தால் ரூ 2 லட்சம் நிதி தருவார்கள். ஆனால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் வழங்கி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மட்டும் 16 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்களை வழங்கியுள்ளார். தேனி மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேருக்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கு இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் பிரதமர் நரேந்திர மோடியும் உருவாக்கிய இந்த கூட்டணி நாம் அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: புதிய தொழிலாளர் சட்டம் பிரதமரின் தற்சார்பு பாரத கனவு… நயினார் நாகேந்திரன் பெருமிதம்...!