ஜெயலலிதா இருந்தப்ப அந்த கட்சி நுழைய முடிஞ்சுதா? விளையாடுது பாஜக... திருமா. எச்சரிக்கை…!
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்- ஆல் அதிமுகவுக்கு ஆபத்து என திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக சந்திக்க திட்டமிட்டுள்ளது. இந்தக் கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று விமர்சித்து வருகின்றனர். அதிமுக மூலம் தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது என்றும் அதிமுகவை பலவீனப்படுத்தும் நோக்கில் தான் பாஜக சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்ட வருகிறது. பாஜகவால் அதிமுகவுக்கு ஆபத்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் எச்சரிக்கை மணியாக இருக்கிறது.
தமிழகத்தில் தாமரை மலராது என்று விமர்சித்து வரும் சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் ஆட்சி அறியனையில் ஏறிவிடலாம் என பாஜக நடப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பாஜகவால் ஆபத்து என தொடர்ந்து அதிமுகவுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஐ முக்கிய செயல் திட்டம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். ஜெயலலிதா இருந்தபோது ஆர் எஸ் எஸ், பாஜகவால் அதிமுக விவகாரங்களில் தலையிட முடிந்ததா எனவும் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ஓபிஎஸ் தியானம் செய்ய வைத்தது யார் என்றும் சசிகலாவை ஓரம் கட்டியது யார் என்றும் டிடிவி தினகரனை முடக்கியது யார் எனவும் திருமாவளவன் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.
இதையும் படிங்க: இன்னும் அடங்கல... மோடி அரசின் தொழிலாளர் விரோத போக்கு..! முறியடிச்சே ஆகணும்... திருமா உறுதி...!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக ஊடுருவி விட்டது என்றும் தலித்துக்களின் குடியிருப்பு பகுதிகளில் அவர்களின் கொடி பறக்கிறது எனவும் தெரிவித்தார். பாமகவினால் வன்னியர்களிடையே ஆர் எஸ் எஸ், பாஜக ஊடுருவ முடியாமல் இருந்தது என்றும் இப்போது அதுவும் மாறிவிட்டது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக... விளைவு பயங்கரமா இருக்கும்... திருமா. வார்னிங்...!