“ஸ்டாலினோட அடுத்த அமைச்சரவை கூட்டமே ஜெயில் தான் நடக்கும்...” - திமுகவிற்கு பகிரங்க சவால் விட்ட தமிழிசை சவுந்தரராஜன்...!
மாட்டியது மாட்டியது தான் யாரையும் விடப்போவதில்லை யாரெல்லாம் ஊழல் செய்து உள்ளார்களோ அனைவரும் உள்ளே செல்ல தான் போகிறார்கள் என தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாநிலங்கள் இவ்வாறு ஊழல் செய்வதால் அவரது பெயரை வைக்க வேண்டாம் என்று மத்தியில் நினைத்திருக்கலாம் நாங்கள் மகாத்மா காந்தி மனதில் வைத்துள்ளோம். சுத்தமான இந்தியா வேண்டும் என்று காந்தி கூறியதை முன்வைத்துதான் ஸ்வச் பாரத் என்ற திட்டத்தையே பிரதமர் மோடி கொண்டு வந்தார். மேலும் காந்தி என்ற பெயரையே திருடி வைத்துள்ளீர்கள் என்றார். காங்கிரஸ் கட்சியினர் பெரோஸ் காந்தி என்பதை தான் காந்தி என குறிப்பிடுகிறார்கள் என்றும் காந்திக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று தெரிவித்தார்.
சிந்து சமவெளி நாகரிகம் என்பதை மறைத்து சரஸ்வதி நாகரிகம் என்ற பெயரில் கருத்தரங்கு நடத்துவதற்கு முற்போக்கு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், முற்போக்கு இயக்கங்களின் பெயரை முதலில் மாற்றங்கள் அவர்கள் பிற்போக்கு இயக்கங்கள் தான், முன்னாள் உள்ள சரித்திரத்தை மறைப்பது தான் முற்போக்கு இயக்கங்களா?, சரஸ்வதி நாகரிகம் என்பது சரித்திரத்தில் உள்ளது என்று கூறிய அவர் முற்போக்கு இயக்கங்கள் சரஸ்வதி லட்சுமி சக்தி என்ற பெயர் வந்தாலே இவர்கள் பதறிப் போய் விடுவார்கள் என தெரிவித்தார். சரஸ்வதியை பற்றி பேசுவதற்கு முன்பு அவர்களை காவிரியை மீட்டுக் கொண்டு வர சொல்லுங்கள் எனவும் தெரிவித்தார்.
துணை குடியரசு தலைவரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்திருப்பது தொடர்பான கேள்விக்கு, துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் அரசியல் சார்பற்று ராஜ்ய சபாவை நடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் என தெரிவித்தார். மேலும் அதிமுகவினர் பாஜக தலைவர்களை சந்திப்பது நட்பு ரீதியாக தான் என்றும் பிரச்சனை கிடையாது என்றும் தெரிவித்தார். அதிகமாக சந்தித்துக் கொள்வதால் நட்பு தான் விரிவடையும் என்றார்.
இதையும் படிங்க: “யாரோ சொல்லி தவெகவில் இணைய வேண்டிய அவசியம் எனக்கில்லை...” - உதயநிதிக்கு நறுக் பதிலடி கொடுத்த செங்கோட்டையன்...!
அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு, அவர்கள் மாட்டியது மாட்டியது தான் யாரையும் விடப்போவதில்லை யாரெல்லாம் ஊழல் செய்து உள்ளார்களோ அனைவரும் உள்ளே செல்ல தான் போகிறார்கள் என தெரிவித்தார். மேலும் மந்திரி சபையையே திமுக சிறைக்குள் தான் நடத்த வேண்டி இருக்கும் என்றும் 13 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தால் மந்திரி சபை கூட்டங்களை சிறைக்குள் தான் நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு பதிவு எல்லாம் தேர்தல் நேரத்தில் என்பது கிடையாது எப்பொழுதும் நடத்தி வரும் வழக்கு தான் எனவும் தெரிவித்தார்.
சட்டமன்றத் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அது ஆண்டவனும் ஆண்டு கொண்டிருப்பவரும் என்ன சொல்கிறார்களோ அதுதான் என தெரிவித்தார். கலங்காமல் களங்கம் ஏற்படாமல் களத்தில் நிற்பவர்கள் நாங்கள் தான் எனவும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசு குறித்து பேசியது தொடர்பான கேள்விக்கு, உதயநிதிக்கு ஏதாவது புரிகிறதா அல்லது புரியவில்லையா என்று தெரியவில்லை அவருக்கு எழுதிக் கொடுப்பவர்களும் எதுகைமோனையுடன் எழுதிக் கொடுக்கிறார்கள் என்றார். பதினோரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது என்பது உதயநிதி ஸ்டாலினுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பிய அவர் சென்னை கோவை திருச்சி தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கங்கள் நடைபெற்றது அவருக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினார். காரர்கள் அனைவருமே ரகசியமாக இந்தி மொழி படிக்கிறார்கள் ரகசியமாக சாமி கும்பிடுகிறார்கள் என கூறினார். இன்றைய காலகட்டத்தில் பிரதமர் தான் காசி தமிழ்ச் சங்கம் பற்றி பேசினார் என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் பெரும் பதற்றம்...!! தமிழிசையை தடுத்து நிறுத்திய விசிகவினர்... போலீசார் குவிப்பு...!