குதூகலிக்கும் குற்றவாளிகள், குறட்டை விடும் போலீஸ்... புனைப்பெயர் ஒரு கேடு..! வெளுத்து வாங்கிய பாஜக..!!
திமுக அரசின் மீதும் காவல் துறை மீதும் தமிழக பாஜக கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளது.
குற்றவாளிகள் குதூகலிப்பதாகவும், காவல்துறை குறட்டை விட்டு தூங்குவதாகவும் தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது. தமிழகத்தில் இரண்டு மாத குழந்தையிலிருந்து 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்றார் போல் பல்வேறு குற்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் திமுக அரசு ஒரு குற்றவாளியைக் கூட கைது செய்யவில்லை என்பது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவதாலேயோ என்னமோ தமிழகக் காவல்துறையும் கையாலாகாதவர்களாகவே மாறிவிட்டனர் போலும் என்றும் விமர்சித்து உள்ளது.
இதையும் படிங்க: ரஜினி பற்றிய விமர்சனம்.. ஆதவ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நயினார்..!!
திமுக அரசின் அவலங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் சமூக ஆர்வலர்களை எப்படி கண்டறியலாம், அவர்கள் மீது என்ன பொய்வழக்கு பதியலாம் என்பதிலேயே தமிழக அரசின் உளவுத்துறையும் காவல்துறையும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், பாலியல் குற்றவாளிகள் பாடு கொண்டாட்டம் தானே என்று இந்த லட்சணத்தில் இவர்களுக்கு “ஸ்காட்லாண்ட் யார்டு” என்ற புனைப்பெயர் ஒரு கேடு என்று கடுமையாக சாடியது.
இதையும் படிங்க: EPS தான் முதலமைச்சர்... வலுவான கூட்டணி..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!!