×
 

பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன்! கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்!!! நயினார் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் சிறார்கள் திரிவதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர சம்பவத்தைச் சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கஞ்சா போதையில் 17 வயது சிறுவர்கள் நான்கு பேர் சேர்ந்து வடமாநிலத் தொழிலாளி ஒருவரை அரிவாளால் தாக்கி ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டியது மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர் போதையில் பயங்கர ஆயுதங்களை ஏந்தி தடம் புரள்வதைப் பார்க்க வேதனையாகவும் பயமாகவும் உள்ளது.

இதையும் படிங்க: 7 வயது சிறுமி வன்கொடுமை! நீதியின் நெருப்பில் திமுக சுட்டுப் பொசுக்கப்படும்!! நயினார் ஆவேசம்!!

 சக மனிதரை ரத்தம் சொட்ட வெட்டி அதை வீடியோ எடுத்துச் சிலாகிப்பது சமூகத்துக்கு பெரும் ஆபத்து. சினிமா பாணியில் வீடியோ வெளியிடும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சமூக வலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.

மேலும், “பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தைத் தான் தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்துக்கும் கூடிய விரைவில் முடிவு கட்டப்படும். தமிழகம் மீட்கப்படும்” என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

இச்சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களிடையே அதிகரிப்பதாகவும், இதைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்! மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share