×
 

"தேர்தலுக்காக பாஜக எத்தகைய செயலையும் செய்யும்!" - அதிகாரிகள் மாற்றம் குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சனம்!

பாஜக எத்தகைய செயலையும் செய்யும் என்று தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் மாற்றம் குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்துத் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக அரசு தேர்தலுக்காக எத்தகைய கீழ்த்தரமான செயலையும் செய்யும் எனச் சாடினார்.

சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், திமுக மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பன் தயாரிப்பில் உருவான 'மனிதம் தொழுவோம் புனிதம் தொழுவோம்' என்ற திமுக தேர்தல் கருத்திசைப் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

"கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் திமுகவுடன் இணைந்து பயணித்த அதிகாரிகள் யாரும் தேர்தல் பணியில் இருக்கக்கூடாது என பாஜக எண்ணுகிறது. தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது தனிச் செயலாளராகப் பணியாற்றியவர். தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்தல் பணிகளில் அமர்த்த பாஜக எத்தகைய செயலையும் செய்யும் என்பதற்கு இதுவே சான்று" எனக் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: சாத்தூரில் நிதின் நபின் ரோடு ஷோ! நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் வாக்கு சேகரிப்பு!

பாஜக சொல்லும் பொய்களைத் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்றும், இந்திய அளவில் உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தமிழகம் முதலிடத்தில் இருப்பதை மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மக்கள் திமுகவையே மீண்டும் ஆதரிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பாஜக கிடப்பில் போட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் திமுக, இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற வலுவான எதிர்க்கட்சிகளுக்குக் குடைச்சல் கொடுக்கவே டெல்லிக்கு அழைப்பது போன்ற குழப்பமான நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்கிறது எனத் தெரிவித்தார்.

திரைப்பட இசையமைப்பாளர் சதீஷ் சக்கரவர்த்தி எழுதி இசையமைத்த இந்தப் பாடலைத் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இராசேந்திரன் பெற்றுக்கொண்டார். இந்தப் பாடலில் திமுக மகளிரணித் தலைவர் விஜயா தாயன்பனும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: தமிழக பாஜக தொண்டர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்! பிரதமர் மோடி புகழாரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share