கொலையா? - திமுக எம்.எல்.ஏ. மகன் குவாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்... அதிர்ச்சி சம்பவம்...!
தற்போது அவரது மகன் விஜயபாரதி குவாரியில் இருந்து இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டது மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமாக ஒரு குவாரி உள்ளது. இந்த குவாரியில், கடந்த 10 நாட்களுக்கு முன்பாக காணாமல் போன கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளைஞரின் உடல் எம். சாண்ட் மணல் குவியலுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை இது கொலையா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை எனக்கூறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியிருந்தது. ஆனால், திமுக எம்எல்ஏ என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் வேட்டை: கட்டு கட்டாய் பணம்... திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளரிடம் சிக்கியது ரூ.30 லட்சம்...!
ஒரு இளைஞர் உயிர் பறிபோயிருக்கிறது. இது விபத்தா அல்லது கொலையா என்பது குறித்த முழுமையான விசாரணை நடைபெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அப்பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே கல் குவாரி ஒன்றில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை திமுக எம்எல்ஏ பழனியாண்டி தாக்கினார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அவரது மகன் விஜயபாரதி குவாரியில் இருந்து இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டது மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரி தேர்தல் 2026: 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்! தனித்து களம் காணும் தவெக!