கன்னியாகுமரி ஆட்சியர் அலுவலகம் இலக்கு? வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ச்சி! தீவிர சோதனை..!!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன.
இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க: திக்... திக்..! அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இயல்பான அலுவலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரசிகைகளுடன் செல்பி எடுத்த விஜய்! கன்னியாகுமரியில் இன்று பிரம்மாண்ட 'ரோடு ஷோ'!