ரசிகைகளுடன் செல்பி எடுத்த விஜய்! கன்னியாகுமரியில் இன்று பிரம்மாண்ட 'ரோடு ஷோ'!
தூத்துக்குடி வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்.. விமான நிலையத்தில் பார்த்ததும் உடனே ஓடி வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட பெண்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நடைபெறவுள்ள பிரம்மாண்டத் தேர்தல் பரப்புரை மற்றும் "ரோடு ஷோ" (Road Show) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தூத்துக்குடி வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் மூலம் வந்த அவரை, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் (Arrival Gate) விஜய்யைக் கண்டதும் அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். விஜய்யைப் பார்த்தவுடன் சில பெண்கள் ஆர்வத்துடன் அவரை நோக்கி ஓடி வந்தனர். அவர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, விஜய் உடனே நின்று அவர்களுடன் புன்னகையுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த எளிமையான அணுகுமுறை அங்கிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியிலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாகக் கன்னியாகுமரிக்கு விஜய் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை கன்னியாகுமரி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரம்மாண்டமான 'ரோடு ஷோ' நடத்துகிறார். மாவட்ட எல்லையான கவண்யாகுமரி பகுதியில் அவருக்குத் தவெக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கத் தயார் நிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: அமித் ஷா மகனுடன் சபரீசனுக்குத் தொடர்பு! அமலாக்கத்துறை மௌனம் காப்பது ஏன் என ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!
ஏற்கனவே அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டைப் பயணங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க விஜய் இன்று கன்னியாகுமரியில் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் வருகையை முன்னிட்டுத் தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் கன்னியாகுமரி ரோடு ஷோ நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் தவெக கொடிகள் மற்றும் பேனர்களுடன் தொண்டர்கள் திரண்டு நின்று தங்கள் தலைவரை வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜனநாயகன் கசிவை அரசியலாக்காதே! தவெக-விற்கு சரத்குமார் கண்டனம்!