×
 

MP கனிமொழி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தொடரும் பதற்றம்...!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் நேற்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் வீடு, நடிகை திரிஷாவின் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: வெடிச்சு சிதற போகுது... அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!

இது போன்ற மிரட்டல்கள் புரளியாக இருந்தாலும் கூட அதீத கவனம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். 

இதையும் படிங்க: வெடிச்சு சிதற போகுது... சென்னை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயில் மூலம் வந்த ஓலை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share