"பயம் விதைக்கும் மெயில் கும்பல்"..! மீண்டும் நீதிமன்றத்தை குறிவைத்த மர்ம நபர்கள்..! தொடரும் பதற்றம்..!!
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு சோதனை நடத்தினர்.
தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராணி வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்ட நிலையில் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஷஹ்னாஸ் நேரில் விசாரணை மேற்கொண்டார். நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீப காலங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "வெடிகுண்டு வெச்சிருக்கோம்"..! நீதிமன்றங்களை குறிவைக்கும் மர்ம மிரட்டல்..!மோப்பநாய், நிபுணர்கள் தீவிர சோதனை..!
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கிடையில் கோவை நீதிமன்றத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நீதிமன்ற வளாகத்திற்கு சென்று அங்கு இருந்த அனைத்து அலுவலகங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் கார்கள் கழிப்பறைகள் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனை செய்தனர். நீண்ட நேரம் நடந்த சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இந்த இ-மெயில் வெடிகுண்டு மிரட்டலும் பெரும் புரளி என்று தெரிய வந்தது.
இதையும் படிங்க: "சூடு பிடிக்கும் பேரவை களம்"..! 4 நாட்கள் சட்டசபை கூடும்..! சபாநாயகர் அறிவிப்பு..!!