டிஜிபி ஆபீசுக்கு பறந்த வெடிகுண்டு மிரட்டல்… சோதனையே வேண்டாம்! நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு…!
நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அண்மைக் காலங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி அலுவலகத்திற்கு மெயில் மூலமாக மிரட்டல் விடுத்து உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிக்.. டிக்... அன்புமணி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பாண்டி பஜார் போலீஸ் தீவிர விசாரணை...!
இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சோதனை வேண்டாம் என கூறியதன் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பதற்றம்... துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமைச் செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...!