×
 

சூடுபிடிக்கும் சிறுவன் கடத்தல் வழக்கு.. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு..!

சிறுவன் கடத்தல் விவகாரத்தில் எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெகன் மூர்த்தி புரட்சி பாரதம் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். 2006இல் அரக்கோணம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட அவர், 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 2021இல் கே.வி.குப்பம் தொகுதியில் வெற்றி பெற்றார். கே.வி.குப்பம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரான இந்திரஜித்தை (வயது 16) புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி மற்றும் முன்னாள் சிறப்பு டிஜிபி ஜெயராமன் கடத்தியதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க: உணவுக்காக காத்திருந்த அப்பாவி மக்கள்.. திடீரென கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம்.. 56 பாலஸ்தீனர்கள் பலி..!

இதையடுத்து அவர்களை போலீசார் விசாரிக்க முடிவு செய்தனர். இதற்கிடையே பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவானார். பின்னர் அவரை போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்கிடையே ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன் மூர்த்தி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன் ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்நிலையில் காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி, கூடுதல் டிஜிபி ஜெயராமன் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து 2 பேர் மீதும் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: வாயை வாடகைக்கு விட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தக்க பாடம் புகட்டப்படும் ... திமுக நிர்வாகி எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share