வாத்தி ரெய்டு..!! லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் ARREST..! பொறி வைத்து தூக்கிய சம்பவம்..!!
லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் கைது செய்யப்பட்டார்.
தாம்பரம் வணிகவரி அலுவலக உதவி ஆணையர் ஜமுனா மீது லஞ்சம் வாங்கியதாக சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூரைச் சேர்ந்த கலைமணி அசோசியேட்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் ஆர். சிவகுமார் மீது வணிகவரித்துறை ஜிஎஸ்டி முரண்பாடு அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதற்கு தேவையான விளக்கங்களையும் ஆதாரங்களையும் அளித்து பதிலளித்த போதிலும், அந்த நோட்டீஸ் தொடர்பான ஆணைகள் பிறப்பிக்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில், நோட்டீஸ் நடவடிக்கைகளை திரும்பப் பெற்று ஆணைகளை பிறப்பித்துத் தருவதாகக் கூறி உதவி ஆணையர் ஜமுனா ரூ.2 லட்சம் லஞ்சம் கோரியதாக சிவகுமார் புகார் அளித்தார். பின்னர் அந்தத் தொகை ரூ.1.75 லட்சமாகக் குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நிறுவன உரிமையாளர் சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய திட்டமிடலுடன் பொறி வைத்தனர். புகார்தாரர் அறிவுறுத்தலின்படி முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணத்தை ஜமுனாவிடம் வழங்கியபோது, அவர் அதைப் பெற்றுக்கொண்டார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக அவரைக் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஜமுனா நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜவ்வாது மலைவாழ் மக்களிடம் ரூ. 1 கோடி லஞ்சம்... 6 பேர் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை..!!
இந்த சம்பவம் வணிகவரித்துறையில் நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. வரி விவகாரங்களில் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வணிகர்களிடம் பணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் அடிக்கடி எழுந்து வருகின்றன. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் அரசுத்துறைகளில் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும் என்றும், பொதுமக்கள் லஞ்சம் கோரும் அதிகாரிகள் மீது தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?