×
 
☰

அரசு ஊழியர்களின் ஊழல் சொத்துகள் பறிமுதல்... சட்டத் திருத்தம் கொண்டு வாங்க..! கோர்ட் அறிவுறுத்தல்..!!

ஊழல் செய்த அரசு ஊழியர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்ட திருத்தம் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அரசு ஊழியர்களின் ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பாக முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளது. ஊழல் குற்றங்கள் வேறு எந்தக் குற்றங்களை விடவும் மிகவும் தீவிரமாகக் கருதப்பட வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் ஊழல் வழிகளில் பெற்ற சொத்துகளைப் பறிமுதல் செய்வதைக் கட்டாயமாக்க சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் சார்பதிவாளர் தங்கவேல் லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

அந்த வழக்கில் திருச்சி நீதிமன்றம் அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவில் தனக்கும் தனது மனைவிக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதை எதிர்த்து வாதிட்டார்.இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே உள்ளன எனக் குறிப்பிட்டார். பறிமுதல் உத்தரவு அதிகார வரம்பற்றது என்று கருத முடியாது என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், தற்போதைய சட்டத்தில் ஒவ்வொரு ஊழல் வழக்கிலும் சொத்துப் பறிமுதல் கட்டாயமாக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.ஊழல் மற்றும் ஊழல் நடைமுறைகள் சமூகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பாதித்துள்ள தீய பழக்கம் என நீதிபதி வலியுறுத்தினார். இந்தத் தீய பழக்கத்தை எதிர்த்துப் போராட கட்டாயப் பற்றுவைப்பும் பறிமுதலும் அவசியம் எனக் கூறினார். 1988ஆம் ஆண்டு அமலுக்கு வந்த ஊழல் தடுப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!

அறியப்பட்ட வருமான ஆதாரங்களுக்கு விகிதாசாரமற்ற முறையில் குவிக்கப்பட்ட செல்வத்தைப் பயன்படுத்தி ஊழல் வழிகளில் பெறப்பட்டதாக நம்பப்படும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுவதாகத் தெரிவித்தார்.இவ்வாறு செய்தால் மட்டுமே ஊழல் வழிகளில் பெற்ற சொத்துகளை அனுபவித்து வரும் அரசு அதிகாரிகளின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த முடியும் என நீதிபதி விளக்கினார். இல்லையெனில் சட்ட விதிகள் வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும், எந்தத் தடுப்பு விளைவும் ஏற்படாது என்றும் எச்சரித்தார். அரசு முன்முயற்சி எடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தும் என நீதிமன்றம் நம்புவதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: வாத்தி ரெய்டு..!! லஞ்சம் வாங்கிய வணிகவரித் துறை ஆணையர் ARREST..! பொறி வைத்து தூக்கிய சம்பவம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share