×
 

தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

வேளாண் பட்ஜெட் நகலுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் வினோத் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக வெற்றிக்கழகம் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு முதன் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாது வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்பார்த்து வேளாண் பட்ஜெட் நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத், வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட் அறிக்கையின் வரைவு நகலைக் கையில் வைத்துக்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

இது தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வாகக் கருதப்படுகிறது.கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரான வினோத், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் வேளாண் துறை பொறுப்பை வகிக்கிறார்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 5-ல் தமிழக பட்ஜெட்..! எகிறும் எதிர்பார்ப்பு... சபாநாயகர் பிரபாகர் முக்கிய அறிவிப்பு..!!

வேளாண் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் வரைவு நகலை எடுத்துச் சென்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பும், தரிசனத்திற்குப் பின்பும் அவர் அந்தப் பட்ஜெட் அறிக்கையை கையில் பிடித்துக்கொண்டு காணப்பட்டார். சிவப்புப் பட்டுத்துணியால் அலங்கரிக்கப்பட்ட நிலையில், அவரது தோழர்களுடன் கோயில் வளாகத்தில் அவர் நடந்து சென்ற காட்சிகள் பதிவாகின.

இதையும் படிங்க: நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share