சிறுமியின் முகத்தை கடித்து குதறிய “BULL DOG”... வளர்ப்பு நாயால் நேர்ந்த துயரம்!
சென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுமியின் முகத்தை புல் டாக் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் தெரு நாய்கள் தொல்லை ஒரு பெருகி வரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினை நகரவாசிகளின் அன்றாட வாழ்க்கையை பாதிப்பதோடு, பொது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, மக்கள் பயத்துடன் நடமாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சென்னையின் பல பகுதிகளில், குறிப்பாக சூளைமேடு, ராயப்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம், குரோம்பேட்டை, பெரம்பூர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி, வில்லிவாக்கம் போன்ற இடங்களில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
தெருக்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிவது, இரவு நேரங்களில் குரைப்பது, மக்களைத் துரத்துவது, சில சமயங்களில் கடிப்பது போன்ற சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளன.
இதையும் படிங்க: டேய் கவினு.. அம்மாவ பாருடா! மகனின் உடலை பார்த்து கதறி துடித்த தாய்..!
இது குழந்தைகள், முதியோர், அதிகாலை நடைபயிற்சி செல்பவர்கள், இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்புபவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஆகியோருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
சில நேரங்களில் வீட்டில் வளர்க்கும் நாய்களும் அதன் உரிமையாளர்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களை கடிக்கும் சம்பவங்களும் வாடிக்கையாக்கி உள்ளது. இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுமியை அமெரிக்க புல் டாக் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீட்டின் உரிமையாளர் ஜோதி என்பவர் வளர்த்து வந்த நாய் சிறுமியை கடித்து குதறி உள்ளது. முகத்தில் படுகாயம் அடைந்த ஏழு வயது சிறுமி அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புல்டாக் சிறுமியின் முகத்தை கடித்துக் குதறிய நிலையில் சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புல்டாக் நாய் வளர்ப்பதற்கான உரிமம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் வளர்க்கும் புல் நாய், சிறுமியின் முகத்தை கடித்து குதறிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடல் ஒப்படைப்பு... மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!