ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!
திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். அதன்பின் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.தொகுதி காலியான பிறகு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற சட்ட விதி உள்ளது. ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்குத் தடை விதித்திருந்தது. இந்தத் தடை காரணமாக திருச்சி கிழக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் தேர்தல் தள்ளிப்போயிருந்தது.
தற்போது நீதிமன்ற விசாரணை முன்னேறிய நிலையில், விரைவில் தடை நீக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.இந்தப் பின்னணியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயால் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்தார். இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் வெற்றி..! மாஸ் காட்டிய தவெக..! முதல்வர் முன்னிலையில் பதவி ஏற்கும் புதிய எம்எல்ஏக்கள்..!
வாக்குச் சாவடிகளின் கட்டமைப்பு பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், வாக்காளர்களுக்கான ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான வாக்குச் சாவடிகள் உள்ள மையங்களில் வசதிகளை மேம்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.திருச்சி கிழக்கு தொகுதி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அனைத்துக் கட்சிகளும் இங்கு கவனம் செலுத்தி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் தேர்வு மற்றும் களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் முடிவுகள்.. விசிகவை தாழ்த்திக் காட்ட முயற்சி..!! பகீர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!