×
 

எடப்பாடி பழனிசாமியால் தான் இந்தியாவுக்கே வரி குறைப்பு... உருட்டி தள்ளிய சி.வி.சண்முகம்...!

எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை ஏற்று தான் நாடு முழுவதும் பிரதமர் மோடி வரியை குறைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரச்சார கூட்டத்தில் பேச்சு

விழுப்புரம் அருகேயுள்ள திருவாமாத்தூரில் அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளனர்.

நகை கடன் தள்ளுபடி என கூறிவிட்டு அதனை தள்ளுபடி செய்யவில்லை, தேர்தல் வருவதினால் நகை கடன் தள்ளுபடி என திமுக கூற தயாராக உள்ளதாவும், ஸ்டாலின் ஆட்சியில் நகை விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதிலிருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு இந்தியாவை பதினோறு ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார்.

இதையும் படிங்க: சோலி முடிஞ்சுது...திமுக கூடாரம் காலி... ரவுண்டு கட்டிய இபிஎஸ்...!

உலக நாடுகளே திரும்பி பார்க்க பிரதமராகவும் பாகிஸ்தானில் போர் புரிந்து வெற்றி கண்டவராக மோடி இருக்கிறார்.

பாஜக அதிமுக குறித்து பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதி இருக்கிறது, இன்றைக்கு எல்லா வரிகளும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் உயிர்காக்கும் மருந்துக்கு வரி இல்லைபொருட்கள் சிமெண்ட்டுக்கு வரி விதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

பால் பொருட்களுக்கு வரி இல்லை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கையை ஏற்று மோடி வரியை குறைத்துள்ளதாக தெரிவித்தார். தற்போது வரி குறைந்துவிட்டது, இப்போது பொது மக்கள் பொருட்கள் வாங்கலாம், வரி குறைப்பு ஏழை, எளிய மக்களுக்கு சென்று சேர்ந்ததா என பார்ப்பதே என் வேலை என மோடி கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் வரியை ஐந்து சதவீதமாக மோடி குறைத்துள்ளதாகவும், பேசினார்

 பாஜக கூட்டணியில் இருப்பது எங்க விருப்பம். உங்களுக்கு ஏன் வலிக்கிறது.அதிமுக எத்தனை பிரிவாக இருந்தால் உங்களுக்கு என்ன, அதிமுக தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்தவரை கட்சியில் ஏன் சேர்க்க வேண்டும், மோடியும், அதிமுகவிற்கும் நல்ல பெயர் வந்துவிட கூடாது என ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு மறைப்பதாகவும், எடப்பாடி.பழனிச்சாமி ஏழை விவசாயி இன்றைக்கும் சேலத்தில் விவசயாம் செய்து வருகிறார்.

 அரசு பணத்தில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுப்பதற்கான அவசியம் என்ன என்று சிவி சண்முகம் பேசினார்

 

இதையும் படிங்க: இ-பாஸ் ரத்து, ஏழைகளுக்கு வீடு, தாலிக்கு தங்கம்... வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share