×
 

அப்பளம் போல் நொறுக்கிய கார்..! முன்னாள் எம்.எல்.ஏ படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதி..!

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் கார் விபத்துக்குள்ளானதில் முன்னாள் எம்எல்ஏ ராசு படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து சி. விஜயபாஸ்கரின் காரை பின் தொடர்ந்து சென்ற போது முன்னாள் எம்எல்ஏ நெடுஞ்செழியனின் கார் விபத்தில் சிக்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் கெண்டையன் பட்டியில் விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மீன் வியாபாரி ஓட்டி வந்த பைக் மோதி இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. காரில் பயணம் செய்த முன்னாள் எம்எல்ஏ ராசு, கார் ஓட்டுனர் ரமணி உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சியில் வியாபாரிகளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.. இபிஎஸ் நம்பிக்கை..!

உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முன்னாள் எம்எல்ஏ ராசு பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அடக்குமுறை, பூச்சாண்டிகளுக்கு பயப்பட மாட்டோம்..! அதிமுக எம்எல்ஏ கைதுக்கு இபிஎஸ் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share