பைக் மீது வேகமாக மோதிய கார்... தூக்கி வீசப்பட்ட 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
ராணிப்பேட்டை அடுத்த நவல்பூர் காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இதன் மூலம் இந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
மேலும் சம்பவ குறித்து ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட தகவலாக விபத்தில் உயிரிழந்தவர்கள் காரை பகுதியை சேர்ந்த தினேஷ் (20) வேலூர் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சாஜன்(26) ஆற்காடு காந்திநகர் சேர்ந்த பாலமுருகன்(19) ஆகிய மூன்று நண்பர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் வாலாஜாவில் இருந்து நவல்பூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றபோது எதிர வந்த கர்நாடகா மாநில பதிவேடு கொண்ட கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் மூன்று நபர்களும் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 12 சீட்டுக்கு பேரம்!! பழனிசாமிக்கு வாசன் போடும் கண்டிஷன்! பாஜகவை கை காட்டும் எடப்பாடி!
நேற்று தூத்துக்குடி கடற்கரை சாலையில் அரசு பயிற்சி மருத்துவர்கள் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலியாகினர், 2 பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மற்றொரு விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு SIR… களத்தில் தவெக… அதுக்கு 16 பேர் கொண்ட குழு வெச்சு இருக்காங்களாம்…!