×
 

சாதிப்பெயர் நீக்குங்கள்... நவம்பர் 11 வரைக்கும் தான் டைம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க நவம்பர் 11ம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தனது சமூக நீதி அரசியலின் முன்னோடியாக இருந்தாலும், சாதி அடையாளங்கள் இன்னும் சமூகத்தின் நிழலாகத் திகழ்கின்றன. இத்தகைய சூழலில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சாதி சார்ந்த பெயர்களைத் தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் என்பவற்றிலிருந்து நீக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது வெறும் பெயர் மாற்றமல்ல. சமூகத்தில் சாதியின் பிணைப்புகளை அறுத்து, சமத்துவத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான படி. ஏப்ரல் 29 அன்று சட்டமன்றத்தில் அறிவித்த இந்த உத்தரவு, தமிழகத்தின் சமூக மாற்றப் போராட்டத்தின் தொடர்ச்சி. இந்த சாதிப்பெயர் நீக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றாலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள தான் செய்கிறது. 

இதனிடையே சாதிப் பெயர்களை நீக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நவம்பர் 11ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தெருக்கள், சாலைகளுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் நீர்நிலைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சாலைகளுக்கு பாரதியார், காந்தி, காமராசர், பெரியார், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் நீர்நிலைகளுக்கு செம்பருத்தி, முல்லை, செண்பகம் உள்ளிட்ட பெயர்களை வைக்கலாம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உள்ளூர் நிலை ஊசலாடுது... உலக அரசியல் தேவையா? முதல்வரை விளாசிய அண்ணாமலை

மேலும், உள்ளூர் மக்களின் சூழ்நிலை குறித்து மதிப்பாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு போன்ற பெயர்கள் மாற்றப்பட உள்ளது.

இதையும் படிங்க: காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share