×
 

சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!

திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டன் இடம் விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உட்பட 20 நபர்கள் மீது 2025ல் தேனி குற்றப்பிரிவு போலீசார் பதிந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார்.

ஜஸ்டின் மணிகண்டன் பணியில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஆவணங்களை சேகரிக்கும் பணியில் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பால விஜய், இவர் தற்போது காஞ்சிபுரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார்

மேல்மங்கலம் கிராமத்தில் பாலவிஜய்க்கு சொந்தமான சுமார் 1ஏக்கர் வீடு மற்றும் நிலத்தினை கட்ட தேவன் என்பவர் பராமரித்து வந்தார். இந்த நிலையில் பாலவிஜய் தனது சொத்துக்களை விற்பனை செய்வதற்காக முயற்சித்த போது கட்ட தேவன் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து பாலவிஜய் போல் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடாக பத்திரப்பதிவு செய்து சொத்தை விற்பனை செய்துள்ளனர்

இதையும் படிங்க: "அடித்தே கொலை"..! சபரிவர்மன் கொலை வழக்கு... சிபிசிஐடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

இதனால் அதிர்ச்சி அடைந்த பாலவிஜய் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கடந்த ஆண்டு புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் கட்டதேவன், ஈஸ்வரன் மற்றும் அப்போதைய பெரியகுளம் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், சார் பதிவாளர் ஜெகதீஸ்வரன், ஓய்வு பெற்ற சிறப்பு ஆய்வாளர்கள் அம்மாவாசி, பாண்டியராஜன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் தற்போது தேனி குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துலட்சுமி திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.

மேலும் ஏற்கனவே திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டன் இடம் விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜஸ்டின் மணிகண்டன் இதுவரை பணி செய்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள ஆவணங்கள் அனைத்தையும் சேகரிக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி பழனி கோவில் நிலம் ரூ.2 கோடிக்கு பதிவு.! பின்னணியில் சென்னை உயரதிகாரிகள்? பரபரப்பு விசாரணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share