பழனி கோயில் நிலத்தை பட்டா போட துணிந்தது எப்படி?... முக்கிய நபர்களை சுற்றி வளைக்க காய் நகர்த்தும் சிபிசிஐடி...!
பழனி அறக்கட்டளை நில மோசடி: 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலப் பத்திரப்பதிவு வழக்கில் தலைமறைவான வெள்ளத்துரை மற்றும் சேதுபதியை சிபிசிஐடி தீவிரமாக தேடி வருகிறது.
பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான மூவரையும் பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பழனியில் சேதுபதி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பழனி கோயில் கட்டுப்பாட்டில் இருந்து தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான அறக்கட்டளை நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றச்சாட்டுக்குட்பட்ட சேதுபதி மற்றும் வெள்ளத்துரையை சிபிசிஐடி போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்திரப் பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி, தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: “யார் அந்த மேலிட புள்ளி?”... பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கால் வைத்ததுமே சிபிசிஐடி செய்த முதல் காரியம்... சிக்கியது முக்கிய ஆவணம்...!
இந்த வழக்கில் ஏற்கனவே பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நிலத்தை வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரையை கைது செய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, பழனியில் உள்ள லட்சுமணன் என்பவரின் வீட்டில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், டி.கே.என். புதூரில் உள்ள சேதுபதியின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதோடு, சேதுபதியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு, அவர் பதுங்கியிருப்பது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர். வழக்கின் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தலைமறைவானவர்களை விரைவில் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், தலைமறைவாக உள்ள வெள்ளத்துறையை கைது செய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். அதோடு, வெள்ளத்துறையின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொண்டு, அவர் பதுங்கியிருப்பது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே அதிரடி ஆக்ஷன்... அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய நபர் அதிரடி கைது...!